Kural 619
குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
thaeivaththaan aakaa thaeninum muyachithan
maeivaruththak kooli tharum
Shuddhananda Bharati
Though fate is against fulfilment
Hard labour has ready payment.
GU Pope
Though fate-divine should make your labour vain;
Effort its labour's sure reward will gain.
Although it be said that, through fate, it cannot be attained, yet labour, with bodily exertion, will yield its reward.
Mu. Varadarajan
ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
Parimelalagar
தெய்வத்தான் ஆகாது எனினும்-முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்-முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி அளவு தரும், பாழாகாது.
விளக்கம்:
(தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும என்பது உம்மையால் பெற்றாம். இரு வழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)
Manakkudavar
(இதன் பொருள்) புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும், ஒருவினையின் கண்ணே முயல்வனாயின், முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்,
(என்றவாறு) இது புண்ணியமில்லையாயினும், பயன் கொடுக்கும் என்றது.