Kural 618
குறள் 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி
poriyinmai yaarkkum paliyanru arivarindhthu
aalvinai inmai pali
Shuddhananda Bharati
Misfortune is disgrace to none
The shame is nothing learnt or done.
GU Pope
'Tis no reproach unpropitious fate should ban;
But not to do man's work is foul disgrace to man!
Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace.
Mu. Varadarajan
நன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.
Parimelalagar
பொறி இன்மை யார்க்கும் பழியன்று-பயனைத் தருவதாய விதியில்லாமை ஒருவற்கும் பழியாகாது; அறிவு அறிந்து ஆள்வினை இன்மை பழி-அறியவேண்டும் அவற்றை அறிந்து வினைசெய்யாமையே பழியாவது.
விளக்கம்:
(அறிய வேண்டுவன- வலி முதலாயின. 'தெய்வம் இயையாவழி ஆள்வினை உடைமையால் பயன் இல்லை,' என்பாரை நோக்கி, 'உலகம் பழவினை பற்றிப் பழியாது, ஈண்டைக் குற்றமுடைமை பற்றியே பழிப்பது' என்றார். அதனால் விடாது முயல்க என்பது குறிப்பெச்சம்..)
Manakkudavar
(இதன் பொருள்) யார்க்கும் புண்ணியமின்மை குற்றமாகாது; அறியத் தகுவன அறிந்து முயற்சியில்லாமையே குற்றமாவது,
(என்றவாறு). அறிவு - காரிய அறிவு. புண்ணியமில்லாதார் முயன்றால் வருவதுண்டோ வென்றார்க்கு , இது கூறப்பட்டது.