குறள் 617

ஆள்வினையுடைமை

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்

matiyulaal maamukati yenpa matiyilaan
thaalulaan thaamaraiyi naal


Shuddhananda Bharati

Manly effort

Illuck abides with sloth they say
*Laxmi's gifts with labourers stay.
*Laxmi the Goddes of wealth and prosperity


GU Pope

Manly Effort

In sluggishness is seen misfortune's lurid form, the wise declare;
Where man unslothful toils, she of the lotus flower is there!

They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (thegoddess of prosperity) dwells with the labour of the industrious.


Mu. Varadarajan

ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்‌; சோம்பல்‌ இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள்‌ வாழ்கின்றாள்‌.


Parimelalagar

மா முகடி மடி உளாள்-கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடி இலான் தாள் உளாள் என்ப-திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(பாவத்தின் கருமை அதன் பயனாக முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார் மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்,
(என்றவாறு). இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.