குறள் 616

ஆள்வினையுடைமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்

muyachi thiruvinai aakkum muyatrrinmai
inmai pukuththi vidum


Shuddhananda Bharati

Manly effort

Industry adds prosperity
Indolence brings but poverty.


GU Pope

Manly Effort

Effort brings fortune's sure increase,
Its absence brings to nothingness.

Labour will produce wealth; idleness will bring poverty.


Mu. Varadarajan

முயற்சி ஒருவனுக்குச்‌ செல்வத்தைப்‌ பெருகச்‌ செய்யும்‌; முயற்சி இல்லாதிருத்தல்‌ அவனுக்கு வறுமையைச்‌ சேர்த்து விடும்‌.


Parimelalagar

முயற்சி திருவினை ஆக்கும்-அரசர்மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்திவிடும்-அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும்.
விளக்கம்:
('செல்வம்-அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே பகை வரான் அழிவர் என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) முயற்சி செல்வத்தை உண்டாக்கும்; முயலாமை வறுமையை உண்டாக்கும்,
(என்றவாறு). இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.