குறள் 615

ஆள்வினையுடைமை

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்

inpam vilaiyaan vinaivilaivaan thankaelir
thunpam thutaiththoonrum thoon


Shuddhananda Bharati

Manly effort

Work who likes and not pleasure
Wipes grief of friends, pillar secure.


GU Pope

Manly Effort

Whose heart delighteth not in pleasure, but in action finds delight,
He wipes away his kinsmen's grief and stands the pillar of their might.

He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows.


Mu. Varadarajan

தன்‌ இன்பத்தை விரும்பாதவனாய்‌ மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன்‌, தன்‌ சுற்றத்தாரின்‌ துன்பத்தைப்‌ போக்கித்‌ தாங்குகின்ற தூண்‌ ஆவான்‌.


Parimelalagar

இன்பம் விழையான் வினை விழைவான்-தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண்-தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம்.
விளக்கம்:
(இஃது ஏகதேச உருவகம். 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், ''மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்கு'' [நாலடி. 387] என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம்; எனவே, தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னுடம்பிற்கு இன்பத்தை விரும்பாது வினை செய்தலை விரும்புமவன், தன்கேளிர்க்கு உற்ற துன்பத்தை நீக்கி அவரைத் தளராமல் தாங்குவ தொரு தூணாம்,
(என்றவாறு). ஆதலால், வருத்தம் பாராது முயல வேண்டு மென்பது.