குறள் 614

ஆள்வினையுடைமை

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்

thaalaanmai illaathaan vaelaanmai paetikai
vaalaanmai polak kedum


Shuddhananda Bharati

Manly effort

Bounty of man who never strives
Like sword in eunuch's hand it fails.


GU Pope

Manly Effort

Beneficent intent in men by whom no strenuous work is wrought,
Like battle-axe in sexless being's hand availeth nought.

The liberality of him, who does not labour, will fail, like the manliness of a hermaphrodite, who hasa sword in its hand.


Mu. Varadarajan

முயற்சி இல்லாதவன்‌ உதவி செய்பவனாக இருத்தல்‌, பேடி தன்‌ கையால்‌ வாளை எடுத்து ஆளும்‌ தன்மைபோல்‌ நிறைவேறாமல்‌ போகும்‌.


Parimelalagar

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை-முயற்சி இல்லாதவன் உபகாரியாம் தன்மை; பேடி கை வாள் ஆண்மை போலக் கெடும்-படை கண்டால் அஞ்சும் பேடி அதனிடைத் தன் கையில் வாளை ஆளுதல் தன்மை போல இல்லையாம்.
விளக்கம்:
('ஆள்' என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். பேடி வாளைப் பணிகோடற் கருத்து உடையளாயினும், அது தன் அச்சத்தால் முடியாதவாறு போல, முயற்சியில்லாதவன் பலர்க்கும் உபகரித்தற் கருத்துடைனாயினும், அது தன் வறுமையான் முடியாது என்பதாம். 'வாளாண்மை' என்பதற்கு வாளாற் செய்யும் ஆண்மை என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது இல்லாதானது குற்றம் கூறப்பட்டது..)


Manakkudavar

(இதன் பொருள்) முயற்சியில்லாதான் பிறர்க்கு உபகரித்தல், படைகண்டா லஞ் சுமவன் கைவாள் பிடித்தாற்போலக் கெடும்,
(என்றவாறு). இஃது அறம் செய்யமாட்டானென்றது.