குறள் 613

ஆள்வினையுடைமை

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு

thaalaanmai yennum thakaimaikkan thangkitrrae
vaelaanmai yennunj serukku


Shuddhananda Bharati

Manly effort

On excellence of industry
Depends magnanimous bounty.


GU Pope

Manly Effort

In strenuous effort doth reside
The power of helping others: noble pride!

The lustre of munificence will dwell only with the dignity of laboriousness or efforts.


Mu. Varadarajan

பிறர்க்கு உதவி செய்தல்‌ என்னும்‌ மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில்‌ நிலைத்திருக்கின்றது.


Parimelalagar

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்று-முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; வேளாண்மை என்னும் செருக்கு-எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு.
விளக்கம்:
(பொருள் கை கூடுதலான், உபகரித்தற்கு உரியார் முயற்சி உடையார் என்பார், அவ்வக் குணங்கள்மேல் வைத்தும், அது பிறர் மாட்டு இல்லை என்பார் 'தங்கிற்றே' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் முயற்சியது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) முயற்சியாகிய நன்மையின்கண்ணே கிடந்தது; பிறர்க்கு உபகரித்தலாகிய பெருமிதம்,
(என்றவாறு). இஃது அறஞ் செய்தலும் இதனாலே யாகுமென்றது.