Kural 621
குறள் 621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்
idukkan varungkaal nakuka athanai
aduththoorvathu akhthoppa thil
Shuddhananda Bharati
Laugh away troubles; there is
No other way to conquer woes.
GU Pope
Smile, with patient, hopeful heart, in troublous hour;
Meet and so vanquish grief; nothing hath equal power.
If troubles come, laugh; there is nothing like that, to press upon and drive away sorrow.
Mu. Varadarajan
துன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.
Parimelalagar
பிறிதில்லையாகலான்.
விளக்கம்:
(வினை இனிது முடிந்துழி நிகழற்பாலதாய மகிழ்ச்சியை, அதற்கு இடையே இடுக்கண் வருவழிச் செய்யவே, அவன் அழிவின்றி, மன எழுச்சியான் 'அதனைத் தள்ளி அக்குறை முடிக்கும் ஆற்றலுடையனாம்' ஆகலின், 'அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்' என்றார்.)
Manakkudavar
இடுக்கணழியாமையாவது யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை. வினை செய்யுங் காலத்தினை முடிவு செய்தவன் முன்னர்ச் சில இடையூறு வந்தால் அவற்றைப் பொறுத்துச் செய்கின்ற வினையை முற்ற முயல வேண்டுமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) தனக்குத் துன்பம் வந்த காலத்தும் நகுக ; அத்துன்பத்தை மேன் மேலும் அடர்க்க வல்லது அந்நகுதல் போல்வது பிறிதில்லை,
(என்றவாறு). இஃது இடுக்கணுக்கு அழியாமை வேண்டுமென்றது.