Kural 622
குறள் 622
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்
vaellath thanaiya idumpai arivutaiyaan
ullaththin ullak kedum
Shuddhananda Bharati
Deluging sorrows come to nought
When wise men face them with firm thought.
GU Pope
Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.
A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.
Mu. Varadarajan
வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
Parimelalagar
வெள்ளத்து அனைய இடும்பை-வெள்ளம்போலக் கரையில வாய இடும்பைகள் எல்லாம், அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்-அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும்.
விளக்கம்:
(இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ் வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) வெள்ளம் போன்ற துன்பம், அறிவுடையவன் நெஞ்சினாலே வினைப்பய னென்று நினைக்கக் கெடும்,
(என்றவாறு). இது பலவா யொருங்கு வரினும், அறிவுடையா னுற்ற இடுக்கண் கெடு மென்றது.