குறள் 611

ஆள்வினையுடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

arumai utaiththaenru asaavaamai vaendum
paerumai muyachi tharum


Shuddhananda Bharati

Manly effort

Feel not frustrate saying "Tis hard".
Who tries attains striving's reward.


GU Pope

Manly Effort

Say not, 'Tis hard’, in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.

Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness(of mind) which is necessary (to do it).


Mu. Varadarajan

இது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல்‌ இருக்க வேண்டும்‌; அதைச்‌ செய்வதற்குத்‌ தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்‌.


Parimelalagar

என்று கருதித் தளராதொழிக; பெருமை முயற்சி தரும்-அது முடித்தற்கேற்ற பெருமையைத் தமக்கு முயற்சி உண்டாக்கும்.
விளக்கம்:
('சிறுமை நோக்கி' என்பது 'பெருமை தரும்' என்றதனானும், 'வினை முடித்தல்' என்பது அதிகாரத்தானும் வருவிக்கப்பட்டன. விடாது முயலத் தாம் பெரியராவர்; ஆகவே, அரியனவும் எளிதின் முடியும் என்பதாம்.)


Manakkudavar

ஆள்வினை யுடைமையாவது முயற்சியுடைமை. செய்யுங் காரியம் உயர நினைத்துச் சோம்புதல் இல்லாதிருந்தாலும் அது முடியுமாறு முயல வேண்டுத் லின், அதன்பின் இது கூறப்பட்டது (இ-ள்.) ஒரு வினையைச் செய்தல் அருமையுடைத்தென்று முயலாமையைத் தவிர்தல் வேண்டும்; முயற்சி தனக்குப் பெருமையைத் தருமாதலால்,
(என்றவாறு). இது வினை செய்து முடித்தல் அரிதென்று தவிர்தலாகாதென்றது.