Kural 610
குறள் 610
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு
matiyilaa mannavan yeithum atiyalandhthaan
thaaaya thaellaam orungku
Shuddhananda Bharati
The slothless king shall gain en masse 610
*All regions trod by Lord apace.
* Hindu mythology holds that Lord Vishnu
measured with his feet the three worlds.
GU Pope
The king whose life from sluggishness is rid,
Shall rule o'er all by foot of mighty god bestrid.
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passedover by him who measured (the worlds) with His foot.
Mu. Varadarajan
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.
Parimelalagar
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன் முறையானன்றி ஒருங்கே எய்தும்.
விளக்கம்:
('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது' என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின் கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) மடியில்லாத மன்னவன் எய்துவன், அடியினால் அளந்தானால் கடக்கப்பட்ட வுலகமெல்லாம் ஒருங்கே,
(என்றவாறு). இது மடியின்மையால் வரும் பயன் கூறிற்று.