Kural 609
குறள் 609
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்
kutiyaanmai yulvandhtha kutrram oruvan
matiyaanmai maatrrak kedum
Shuddhananda Bharati
The blots on race and rule shall cease
When one from sloth gets his release.
GU Pope
Who changes slothful habits saves
Himself from all that household rule depraves.
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family willdisappear.
Mu. Varadarajan
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.
Parimelalagar
ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந்தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும்.
விளக்கம்:
(மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏது வாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத் தொகை. 'அவற்றின் கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒரு வன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும்,
(என்றவாறு). குற்றம் - குடிக்கு வேண்டுவன செய்யாமையால் வருங் குற்றம்.