குறள் 608

மடியின்மை

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்

matimai kutimaikkan thangkinthan onnaarkku
atimai pukuththi vidum


Shuddhananda Bharati

Freedom from sloth

If sloth invades a noble house
It will become a slave of foes.


GU Pope

Unsluggishness

If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.

If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.


Mu. Varadarajan

சோம்பல்‌ நல்ல குடியில்‌ பிறந்தவனிடம்‌ வந்து பொருந்தினால்‌, அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்‌.


Parimelalagar

மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்;
விளக்கம்:
(மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல் தன்மை, அஃது அதனை உடைய அரசன் மேற்றதல், 'தன் ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை - தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.)


Manakkudavar

(இதன் பொருள்) குடிப்பிறந்தார் மாட்டே மடிமை தங்குமாயின், அது தன் பகை வர்க்கு அடிமையாக்கிவிடும்,
(என்றவாறு). இது கீழ்ப்படுத்தலேயன்றி அடிமையும் ஆக்குமென்றது.