Kural 607
குறள் 607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்
itipurindhthu yellunjsol kaetpar matipurindhthu
maanda ugnyatrri lavar
Shuddhananda Bharati
The slothful lacking noble deeds
Subject themselves to scornful words.
GU Pope
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subjectthemselves to rebukes and reproaches.
Mu. Varadarajan
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.
Parimelalagar
மடிந்து புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச் செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து சொல்லும் சொல்லைக் கேட்பர்.
விளக்கம்:
('இடி என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான், 'நட்டார்' என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு சொல்லும் ஆற்றல் இன்மையின், 'கேட்பர்' என்றார்.)
Manakkudavar
(இதன் பொருள்) கழறுதலைச் செய்து பிறர் இகழ்ந்து சொல்லுஞ் சொல்லைக் கேட் பர், மடியைச் செய்து மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்,
(என்றவாறு).