Kural 606
குறள் 606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது
patiyutaiyaar patrramaindhthak kannum matiyutaiyaar
maanpayan yeithal arithu
Shuddhananda Bharati
With all the wealth of lords of earth
The slothful gain nothing of worth.
GU Pope
Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.
It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the wholeearth, to derive any great benefit from it.
Mu. Varadarajan
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
Parimelalagar
படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலம் முழுவதும் ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி உடையார் மாண் பயன் எய்தல் அரிது - மடியுடையார் அதனான் மாண்ட பயனை எய்துதல் இல்லை.
விளக்கம்:
('உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் - பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர் துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.)
Manakkudavar
(இதன் பொருள்) பூமியையுடைய வேந்தர் பல்பொருளினாலும் அமைந்த விடத் தும் மடியுடையாராயின், மாட்சிமைப்பட்ட பொருளைப் பெறுதல் இல்லை, (எ-று). இது செல்வமுண்டாயினும் கெடுவரென்றது.