குறள் 598

ஊக்கமுடைமை

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு

ullam ilaathavar yeithaar ulakaththu
valliyam yennunj serukku


Shuddhananda Bharati

Energy

Heartless persons cannot boast
"We are liberal to our best".


GU Pope

Energy

The soulless man can never gain
Th’ ennobling sense of power with men.

Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".


Mu. Varadarajan

ஊக்கம்‌ இல்லாதவர்‌, இவ்வுலகில்‌ யாம்‌ வண்மை உடையேம்‌ ' என்று தம்மைத்‌ தாம்‌ எண்ணி மகிழும்‌ மகிழ்ச்சியை அடையமாட்டார்‌.


Parimelalagar

உள்ளம் இல்லாதவர்-ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்-இவ்வுலகத்தாருள் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெற்றார்.
விளக்கம்:
(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கு எய்தார்' என்றார். கொடை வென்றியினாய இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின் தன்மையால் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உள்ள மிகுதியில்லாதார் உலகின்கண் வண்மையுடைமை யென் னுங் களிப்பினைப் பெறார்,
(என்றவாறு). இஃது உள்ளமிகுதி யில்லாதார்க்குப் பொருள் வரவு இல்லையாம்; ஆதலான், அவர் பிறர்க்கு ஈயமாட்டாரென்றது.