குறள் 597

ஊக்கமுடைமை

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

sithaividaththu olkaar uravor puthaiyampitr
patduppaa toonrung kaliru


Shuddhananda Bharati

Energy

Elephants are firm when arrows hit
Great minds keep fit ev'n in defeat.


GU Pope

Energy

The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.

The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.


Mu. Varadarajan

உடம்பை மறைக்குமளவு அம்புகளால்‌ புண்பட்டும்‌, யானை தன்‌ பெருமையை நிலைநிறுத்தும்‌; அதுபோல்‌, ஊக்கம்‌ உடையவர்‌ அழிவு வந்தவிடத்திலும்‌ தளரமாட்டார்‌.


Parimelalagar

களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும்-களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்-அது போல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.
விளக்கம்:
(புதை - அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்; மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறு போல,
(என்றவாறு). இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.