Kural 594
குறள் 594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
aakkam atharvinaaich sellum asaivilaa
ookka mutaiyaa nulai
Shuddhananda Bharati
Fortune enquires, enters with boom
Where tireless strivers have their home.
GU Pope
The man of energy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.
Wealth will find its own way to the man of unfailing energy.
Mu. Varadarajan
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
Parimelalagar
அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்-பொருள் தானே வழி வினவிக்கொண்டு செல்லும்.
விளக்கம்:
(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத் தானே சென்று சாரும் என்பார், 'அதர் வினாய்ச் செல்லும்' என்றார். எய்தி நின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) அசைவில்லாத ஊக்கமுடையான் மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும், (எ-று). நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ என்றார்க்கு இது கூறப்பட்டது.