Kural 593
குறள் 593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்
aakkam ilandhthaemaenru allaavaar ookkam
oruvandhtham kaiththutai yaar
Shuddhananda Bharati
he strong in will do not complain
The loss of worldly wealth and gain.
GU Pope
‘Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."
Mu. Varadarajan
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.
Parimelalagar
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்-இழந்தவராயினும் யாம் கைப்பொருளை இழந்தோம் என்று அலமரார்; ஒரு வந்தம் ஊக்கம் கைத்து உடையார்-நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
விளக்கம்:
('ஆக்கம்' ஆகுபெயர். ஒரு வந்தம் ஆய ஊக்கம் என்க. கைத்து - கையகத்தாய பொருள்: "கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்' (நாலடி 19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது, வருகின்ற பாட்டால் கூறுப.)
Manakkudavar
(இதன் பொருள்) செல்வத்தை இழந்தோமென்று அலமரார்; உள்ளமிகுதியை ஒரு தலையாகத் தம்மாட்டுடையார், (எ – று). இது பொருட்கேடுவரினுந் தளராரென்றது.