குறள் 592

ஊக்கமுடைமை

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

ullam utaimai utaimai porulutaimai
nillaathu neengki vidum


Shuddhananda Bharati

Energy

Psychic heart is wealth indeed
Worldly wealth departs in speed.


GU Pope

Energy

The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.

The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.


Mu. Varadarajan

ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்‌; மற்றப்‌ பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல்‌ நீங்கிவிடுவதாகும்‌.


Parimelalagar

உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள் உடைமை நிலை நில்லாது நீங்கிப் போம்.
விளக்கம்:
('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப் பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின், அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே, அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) உடைமையாவது ஊக்கமுடைமை; பொருளுடைமை நிலை நில்லாது நீங்கும்,
(என்றவாறு) பொருள் உடையார்க்கு எல்லா முண்டா மென்பார்க்கு இது கூறப் பட்டது.