குறள் 591

ஊக்கமுடைமை

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று

utaiyar yenappaduvathu ookkam akhthillaar
utaiyathu utaiyaroa matrru


Shuddhananda Bharati

Energy

To own is to own energy
All others own but lethargy.


GU Pope

Energy

'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.

Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?


Mu. Varadarajan

ஒருவர்‌ பெற்றிருக்கின்றார்‌ என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்‌; ஊக்கம்‌ இல்லாதவர்‌ வேறு எதைப்‌ பெற்றிருந்தாலும்‌ அதை உடையவர்‌ ஆவரோ?


Parimelalagar

உடையர் எனப்படுவது ஊக்கம்-ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ- அவ்வூக்கம் இல்லாதார் வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
விளக்கம்:
('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற பொருளை. 'உம்'மை விகாரத்தால் தொக்கது. காக்கும் ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.)


Manakkudavar

ஊக்கமுடைமையாவது அதனைச் செய்யுமிடத்துக் காலத்து அருமையை ஓராது இவ்வாறு செய்யக்கடவேனென்று கருதுங் கருத்துடைமை. பிறர் நாடு கொள்ளுங்காலத்து அவ்விடத்துள்ள செய்தியை ஒற்றரால் அறிந்த பின்பு அதனையே அறிந்து கொள்ளக்கடவேனென்று நினைக்கும் கருத்து வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) ஒற்றரையுடைமை யென்று சொல்லப்படுவது ஊக்கமுடைமை ; அஃதிலாதார் மற்றுடையதாகிய பொருளெல்லாம் உடையராகார்,
(என்றவாறு).