குறள் 568

வெருவந்தசெய்யாமை

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு

inaththaatrri yennaatha vaendhthachiinaththaatrrich seerichiirukum
vaendhthachiinaththaatrrich seerichiirukum thiru


Shuddhananda Bharati

Avoiding terrorism

The king who would not take counsels
Rages with wrath-his fortune fails.


GU Pope

Absence of 'Terrorism'

Who leaves the work to those around, and thinks of it no more;
If he in wrathful mood reprove, his prosperous days are o'er!

The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commitsthem to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.


Mu. Varadarajan

அமைச்சர்‌ முதலான தன்‌ இனத்தாரிடம்‌ கலந்து எண்ணாத அரசன்‌, சினத்தின்‌ வழியில்‌ சென்று சீறி நிற்பானானால்‌, அவனுடைய செல்வம்‌ சுருங்கும்‌.


Parimelalagar

இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன்-காரியத்தைப் பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச் சீறின்-அப் பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித் தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின்; திருச் சிறுகும்-அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
விளக்கம்:
(அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின் பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே, அப்பிழைப்புத் தீருமாறும் அப் பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறர் செய்த குற்றத்தைத் தனக்கு இனமானாரோடே அமைந்து ஆராயாத அரசன் கடிய சொல்லனுமாய்க் கண்ணோட்டமும் இலனாயின், அவனது செல்வம் நாடோறும் சுருங்கும்,
(என்றவாறு) ஆராயாத அரசன் சின்னெறியிற் றீரானாயின், அவன் செல்வம் குறையும் மென்றவாறு. இனம் - மந்திரி புரோகிதர்.