குறள் 567

வெருவந்தசெய்யாமை

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்

kadumoliyum kaiyikandhtha thandamum vaendhthan
adumuran thaeikkum aram


Shuddhananda Bharati

Avoiding terrorism

Reproofs rough and punishments rude
Like files conquering power corrode.


GU Pope

Absence of 'Terrorism'

Harsh words and punishments severe beyond the right,
Are file that wears away the monarch's conquering might.

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying(his enemies).


Mu. Varadarajan

கடுமையான சொல்லும்‌ முறைகடந்த தண்டனையும்‌ அரசனுடைய வெற்றிக்குக்‌ காரணமான வலிமையைத்‌ தேய்க்கும்‌ அரம்‌ ஆகும்‌.


Parimelalagar

கடுமொழியும் கையிகந்த தண்டமும்-கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்-அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
விளக்கம்:
(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னா முகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற்சொல்லல், கை இகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதுஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) கடுஞ்சொற் கூறுதலும் குற்றத்தின் மிக்க தண்டஞ் செய்தலும் அரசனுடைய பகைவரை வெல்லும் வலியைத் தேய்க்கும் அரமாம்,
(என்றவாறு). இது வலியைக் கெடுக்கும் என்றது.