Kural 566
குறள் 566
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்
kadunjsollan kannilan aayin naedunjselvam
neetinri aangkae kedum
Shuddhananda Bharati
Whose word is harsh, whose sight is rude
His wealth and power quickly fade.
GU Pope
The tyrant, harsh in speach and hard of eye,
His ample joy, swift fading, soon shall die.
The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, willinstantly perish instead of abiding long, with him.
Mu. Varadarajan
கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.
Parimelalagar
கடுஞ் சொல்லன் கண்இலன் ஆயின்-அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்; நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும்-அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
விளக்கம்:
("வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூது பொருள்ஈட்டம் கள்காமமொடு ஏழு" எனப்பட்ட விதனங்களுள், கடுஞ்சொல்லையும் மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர். இவை செய்தபொழுதே கெடுஞ்சிறுமைத்து அன்றாயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)
Manakkudavar
(இதன் பொருள்) அரசன் கடிய சொல்லை யுடையவனுமாய்க் , கண்ணோட்டமும் இலனாயின், அவனது தொன்றுதொட்டு வருகின்ற செல்வம் பின்பு நிற்றலின்றி அக்காலத்தே கெடும்,
(என்றவாறு). இஃது குறைதலேயன்றி முழுதுங் கெடுமென்றது.