குறள் 565

வெருவந்தசெய்யாமை

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து

arunjsevvi innaa mukaththaan paerunjselvam
paeyeikan dannathu utaiththu


Shuddhananda Bharati

Avoiding terrorism

Whose sight is scarce, whose face is foul
His wealth seems watched by a ghoul.


GU Pope

Absence of 'Terrorism'

Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is likethat which has been obtained by a devil.


Mu. Varadarajan

எளிதில்‌ காணமுடியாத அருமையும்‌, இனிமையற்ற முகமும்‌ உடையவனது பெரிய செல்வம்‌, பேய்‌ கண்டு காத்திருப்பதைப்‌ போன்ற தன்மையுடையது.


Parimelalagar

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்-தன்னைக் காணவேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினை யுடையானது பெரிய செல்வம்; பேய் கண்டன்னது உடைத்து- பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
விளக்கம்:
(எனவே, இவை இரண்டும் வெருவந்த செய்தலாயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படாது என்பதுபற்றிப் 'பேய் கண்டன்னது உடைத்து' என்றார். காணுதல்: தன் வயமாக்குதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) காண்டற்கரிய செவ்வியையும் இன்னா முகத்தையும் உடையவர் னது பெரிய செல்வம் பேயைக்கண்ட தொக்க அச்சந்தருதலுடைத்து, (எ-று). இது செல்வத்தை வாங்குவார் இன்மையின் படை சேராதென்றது.