குறள் 564

வெருவந்தசெய்யாமை

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்

iraikatiyan yenruraikkum innaachsol vaendhthan
uraikaduki ollaik kedum


Shuddhananda Bharati

Avoiding terrorism

As men the king a tyrant call
His days dwindled, hasten his fall.


GU Pope

Absence of 'Terrorism'

‘Ah! cruel is our king', where subjects sadly say,
His age shall dwindle, swift his joy of life decay.

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.


Mu. Varadarajan

'நம்‌ அரசன்‌ கடுமையானவன்‌ என்று குடிகளால்‌ கூறப்படும்‌ கொடுஞ்‌ சொல்லை உடைய வேந்தன்‌, தன்‌ ஆயுள்‌ குறைந்து விரைவில்‌ கெடுவான்‌.


Parimelalagar

இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்-குடிகளான் 'நம் இறைவன் கடியன்' என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்; உறை கடுகி ஒல்லைக் கெடும்-ஆயுளும் குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
விளக்கம்:
(நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற் பெயர். அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது; அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னிழலில் வாழ்வாரால் அரசன் கடியனென்று கூறப்பட்ட இன்னாத சொல்லையுடைய வேந்தனானவன், தானுறையும் இடம் வெகுளப்பட்டு விரைந்து கெடும்,
(என்றவாறு) இது நாடும் தான் உறையும் இடமும் பொறுப்பினும் தெய்வத்தினாற் கெடுவ னென்றது.