Kural 563
குறள் 563
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்
vaeruvandhtha seitholukum vaengkoala naayin
oruvandhtham ollaik kedum
Shuddhananda Bharati
His cruel rod of dreadful deed
Brings king's ruin quick indeed.
GU Pope
Where subjects dread of cruel wrongs endure,
Ruin to unjust king is swift and sure.
The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come toruin.
Mu. Varadarajan
குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.
Parimelalagar
வெருவந்த செய்து ஒழுகும் செங்கோலன் ஆயின்-குடிகள் வெருவிய செயல்களைச் செய்து நடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும்-அரசன் ஒருதலையாகக் கடிதில் கெடும்.
விளக்கம்:
(வெங்கோலன்' என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. 'ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம்' என்பன ஒரு பொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.)
Manakkudavar
(இதன் பொருள்) அரசன் அஞ்சத்தகுவனவற்றைச் செய்தொழுகும் வெங்கோலை யுடையனாயின், அவன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்,
(என்றவாறு)