குறள் 562

வெருவந்தசெய்யாமை

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்

katithochi maella yerika naetithaakkam
neengkaamai vaendu pavar


Shuddhananda Bharati

Avoiding terrorism

Wield fast the rod but gently lay
This strict mildness prolongs the sway.


GU Pope

Absence of 'Terrorism'

For length of days with still increasing joys on Heav'n who call,
Should raise the rod with brow severe, but let it gently fall.

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquireswith strictness, and then punish with mildness.


Mu. Varadarajan

ஆக்கம்‌ நெடுங்காலம்‌ நீங்காமலிருக்க விரும்புகின்றவர்‌ (தண்டிக்கத்‌ தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல்‌ காட்டி, அளவு மீறாமல்‌ முறை செய்ய வேண்டும்‌.


Parimelalagar

கடிதுஓச்சி-அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக-செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்-ஆக்கம் தம்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
விளக்கம்:
(கடிது ஓச்சல், குற்றஞ் செய்வார் அதனை அஞ்சுதற் பொருட்டும், மெல்ல எறிதல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவில் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. 'ஓச்சுதல்', 'எறிதல்' என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன. இவை இரண்டு பாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) கடி தாகச் செய்வாரைப்போன்று மெல்லிதாகச் செய்க, நெடி தாக வருகின்ற ஆக்கம் நீங்காமையை வேண்டுவார்,
(என்றவாறு). இது குற்றத்திற்குத் தக்க தண்டத்தைக் குறையச் செய்யவேண்டு மென்றது.