குறள் 561

வெருவந்தசெய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

thakkaangku naatith thalaichsellaa vannaththaal
oththaangku oruppathu vaendhthu


Shuddhananda Bharati

Avoiding terrorism

A king enquires and gives sentence
Just to prevent future offence.


GU Pope

Absence of 'Terrorism'

Who punishes, investigation made in due degree,
So as to stay advance of crime, a king is he.

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice),suitably punishes it, so that it may not be again committed.


Mu. Varadarajan

செய்த குற்றத்தைத்‌ தக்கவாறு ஆராய்ந்து மீண்டும்‌ அக்‌ குற்றம்‌ செய்யாதபடி குற்றத்திற்குப்‌ பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன்‌ ஆவான்‌.


Parimelalagar

தக்காங்கு நாடி-ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து-பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
விளக்கம்:
['தக்காங்கு', 'ஒத்தாங்கு' என்பன ஒரு சொல். தகுதி என்பது நடுவுநிலைமையாதல் "தகுதி என ஒன்றும் நன்றே" (குறள். 111) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.]


Manakkudavar

வெருவந்த செய்யாரையாவது பிறர்க்கு ஐயம் வருவன செய்யாமையும், தனக்கு அச்சம் வருவன செய்யாமையும் கூறுதல். தான் முறைசெய்வாரைப் போன்றிருந்து அதனை உலகத்தார் வெருவுமாறு செய்வனாயின், அதுவுங் கொடுங் கோலோடு ஒக்குமென்று அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமைக் காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்,
(என்றவாறு).