குறள் 560

கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்

aapayan kunrum arutholilor noolmarappar
kaavalan kaavaan yenin


Shuddhananda Bharati

The cruel tyranny

The *six-functioned forget their lore
Cows give less if kings guard no more.
* the six functions are : learning, teaching, giving,
getting, sacrificing, kindling sacrifice - These are duties of Vedic savants.


GU Pope

The Cruel Sceptre

O Where guardian guardeth not, udder of kine grows dry,
And Brahmans' sacred lore will all forgotten lie.

If the guardian (of the country) neglects to guard it, the produce of the cows will fail, and the men ofsix duties viz., the Brahmins will forget the vedas.


Mu. Varadarajan

நாட்டைக்‌ காக்கும்‌ தலைவன்‌ முறைப்படி காக்காவிட்டால்‌ அந்நாட்டில்‌ பசுக்கள்‌ பால்‌ தருதலாகிய பயன்‌ குன்றும்‌; அந்தணரும்‌ அறநூல்களை மறப்பர்‌.


Parimelalagar

காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின்; ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும்; அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர்.
விளக்கம்:
(ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஒதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) பசுக்கள் பால் குறையும்; அந்தணர் வேதம் ஓதார்; அரசன் காவா னாயின்,
(என்றவாறு). இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று.