குறள் 559

கொடுங்கோன்மை

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்

muraikoati mannavan seiyin uraikoati
ollaathu vaanam paeyal


Shuddhananda Bharati

The cruel tyranny

The sky withdraws season's shower
If the king misuses his power.


GU Pope

The Cruel Sceptre

Where king from right deflecting, makes unrighteous gain,
The seasons change, the clouds pour down no rain.

If the king acts contrary to justice, rain will become unseasonable, and the heavens will withholdtheir showers.


Mu. Varadarajan

அரசன்‌ முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால்‌, அந்த நாட்டில்‌ பருவமழை தவறி மேகம்‌ மழை பெய்யாமல்‌ போகும்‌.


Parimelalagar

மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின்; உறை கோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது.
விளக்கம்:
(இரண்டிடத்தும் 'கோடல்' என்பன திரிந்து நின்றன. உறை கோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)


Manakkudavar

(இதன் பொருள்) முறைமைகோட மன்னவன் செய்வனாயின், பழை துளிவிடு தலைத் தவிர்ந்து பெய்யாதொழியும்,
(என்றவாறு).