குறள் 558

கொடுங்கோன்மை

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்

inmaiyin innaathu utaimai muraiseiyaa
mannavan koatrkeelp patin


Shuddhananda Bharati

The cruel tyranny

To have is worse than having not
If ruler is unjust despot.


GU Pope

The Cruel Sceptre

To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.

Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king withoutjustice.


Mu. Varadarajan

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல்‌ ஆட்சியின்‌ கீழ்‌ இருக்கப்பெற்றால்‌, பொருள்‌ இல்லாத வறுமை நிலையைவிடச்‌ செல்வநிலை துன்பமானதாகும்‌


Parimelalagar

முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின்; இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது.
விளக்கம்:
(தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நல்குரவினும் செல்வம் துன்பமாகும்; முறைசெய்யாத அரசனது கொடுங்கோலின்கீழே குடியிருக்கின்,
(என்றவாறு). இது பொருளுடையாரும் துன்பமுறுவரென்றது. இவை மூன்றும் முறை செய்யாமையாலே வருங் குற்றங் கூறின.