குறள் 557

கொடுங்கோன்மை

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

thuliyinmai gnyaalaththitrku yetrratrrae vaendhthan
aliyinmai vaalum uyirkku


Shuddhananda Bharati

The cruel tyranny

Dry like the earth without rainfall
Is graceless king to creatures all.


GU Pope

The Cruel Sceptre

Wi As lack of rain to thirsty lands beneath,
Is lack of grace in kings to all that breathe.

As is the world without rain, so live a people whose king is without kindness.


Mu. Varadarajan

மழைத்துளி இல்லாதிருத்தல்‌ உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில்‌ வாழும்‌ குடிமக்களுக்கு அரசனுடைய அருள்‌ இல்லாத ஆட்சி.


Parimelalagar

துளி இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும்; அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு.
விளக்கம்:
(சிறப்புப்பற்றி, 'துளி' என்பது மழைமேல் நின்றது: "உயிர்" என்பது குடிகள்மேல் நின்றது. மேல் "வான் நோக்கி வாழும்" என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) உலகத்திற் பல்லுயிர்க்கும் மழையில்லையானால் வருந்துன்பம் எத்தன்மைத்தாகின்றது அத்தன்மைத்து ; அரசன் அருளிலனாதல் அவன் கீழ் வாழும் மக்கட்கு,
(என்றவாறு). இஃது அருள் செய்யாமையால் வருங் குற்றங் கூறிற்று.