குறள் 555

கொடுங்கோன்மை

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் பட

allatrpatdu aatrraathu aluthakan neeranrae
selvaththaith thaeikkum pada


Shuddhananda Bharati

The cruel tyranny

Groaning tears caused by tyrant's sway
File the royal wealth away.


GU Pope

The Cruel Sceptre

His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away?

Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from theirking), become a saw to waste away his wealth ?


Mu. Varadarajan

( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத்‌ தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால்‌ பலர்‌ துன்பப்பட்டுத்‌ துன்பம்‌ பொறுக்க முடியாமல்‌ அழுத கண்ணீர்‌ அன்றோ?


Parimelalagar

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே; செல்வத்தைத் தேய்க்கும் படை-அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
விளக்கம்:
(அழுத கண்ணீர்; அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு, அதற்கு ஆற்றாது, அழுத கண்ணீரன்றோ ? செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம்,
(என்றவாறு). இஃது அவ்வரசன் கெடுமென்றது.