குறள் 554

கொடுங்கோன்மை

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

koolung kutiyum orungkilakkum koalkoatich
koolaathu seiyum arasu


Shuddhananda Bharati

The cruel tyranny

The king shall wealth and subjects lose
If his sceptre he dares abuse.


GU Pope

The Cruel Sceptre

Whose rod from right deflects, who counsel doth refuse,
At once his wealth and people utterly shall lose.

The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once bothhis wealth and his subjects.


Mu. Varadarajan

( ஆட்சிமுறை கெட்டுக்‌ ) கொடுங்கோலனாகி ஆராயாமல்‌ எதையும்‌ செய்யும்‌ அரசன்‌, பொருளையும்‌ குடிகளையும்‌ ஒரு சேர இழந்து விடுவான்‌.


Parimelalagar

சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்; கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.
விளக்கம்:
('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)


Manakkudavar

(இதன் பொருள்) பொருளையும் பொருள் தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்,
(என்றவாறு) இஃது ஆராயாது செய்வதனால் வருங் குற்றங் கூறிற்று.