குறள் 553

கொடுங்கோன்மை

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்

naadorum naati muraiseiyaa mannavan
naadorum naadu kedum


Shuddhananda Bharati

The cruel tyranny

Spy wrongs daily and do justice
Or day by day the realm decays.


GU Pope

The Cruel Sceptre

Who makes no daily search for wrongs, nor justly rules, that king
Doth day by day his realm to ruin bring.

The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, willdaily fall to ruin.


Mu. Varadarajan

நாள்தோறும தன்‌ ஆட்சியில்‌ விளையும்‌ நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன்‌, நாள்தோறும்‌ ( மெல்ல மெல்லத்‌ ) தன்‌ நாட்டை இழந்து வருவான்‌.


Parimelalagar

நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும்.
விளக்கம்:
(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்', என்று உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

(இதன் பொருள்) குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து, அதற்குத்தக முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும்,
(என்றவாறு) இது நாடு கெடுமென்றது.