Kural 552
குறள் 552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு
vaelodu ninraan iduvaen rathupolum
koalodu ninraan iravu
Shuddhananda Bharati
Sceptered tyrant exacting gold
Is "give" of lanced robber bold.
GU Pope
As 'Give' the robber cries with lance uplift,
So kings with sceptred hand implore a gift.
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber whostands with a weapon in hand and says "give up your wealth".
Mu. Varadarajan
ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது.
Parimelalagar
வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத் தனியே வேல் கொண்டு நின்ற கள்வன்; இடு என்றது போலும்-ஆறு செல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடு ஒக்கும்; கோலொடு நின்ற இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்ற அரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல்.
விளக்கம்:
('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால் இறைப்பொருள் அன்மையும் பெற்றாம். 'தாராக்கால் ஒறுப்பல்' என்னும் குறிப்பினன் ஆகலின், இரவாற் கோடலும் கொடுங்கோன்மை ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையது குற்றம் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) தனியிடத்தே வேலொடு நின்றவன் கையிலுள்ளன தா வென் றல் போலும்; முறைசெய்தலை மேற்கொண்டுநின்றவன் குடிகள் மாட்டு இரத் தல்,
(என்றவாறு). கோலொடு நிற்றல் - செவ்வைசெய்வாரைப் போன்று நிற்றல். நிச்சயித்த கட மைக்கு மேல் வேண்டுகோளாகக கொள்ளினும், அது வழியிற் பறிப்பதனோடு ஒக்குமென்றவாறு.