குறள் 550

செங்கோன்மை

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்

kolaiyitr kotiyaarai vaendhthoruththal paingkool
kalaikat dathanodu naer


Shuddhananda Bharati

Just government

Killing killers, the king, behold
Weeds removes from cropful field.


GU Pope

The Right Sceptre

By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.

For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.


Mu. Varadarajan

கொடியவர்‌ சிலரைக்‌ கொலைத்தண்டனையால்‌ அரசன்‌ ஒறுத்தல்‌ பயிரைக்‌ காப்பாற்றக்‌ களையைக்‌ களைவதற்கு நிகரான செயலாகும்‌.


Parimelalagar

வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்-அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்; பைங்கூழ்களை கட்டதனோடு நேர்-உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
விளக்கம்:
['கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைபடார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை; இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ளோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார் மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.]


Manakkudavar

(இ-ள்.) கொடுமை செய்வாரைக் கொலையினானே அரசன் ஒறுத்தல் குற்ற மன்று; உழவன் பைங்கூழ் வளர்தற்குக் களை களைந்ததனோடு ஒக்கும், (எ-று). கொடியாராவார் கள்வர், ஆறலைப்பார், சூறைகொள்வார்.