குறள் 548

செங்கோன்மை

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

yenpathaththaan oaraa muraiseiyaa mannavan
thanpathaththaan thaanae kedum


Shuddhananda Bharati

Just government

Hard of access, the unjust king
He shall himself his ruin bring.


GU Pope

The Right Sceptre

Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.

The king who gives not facile audience (to those who approach him), and who does not examine andpass judgment (on their complaints), will perish in disgrace.


Mu. Varadarajan

எளிய செல்வி உடையவனாய்‌ ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன்‌ தாழ்ந்த நிலையில்‌ நின்று ( பகைவரில்லாமலும்‌) தானே கெடுவான்‌.


Parimelalagar

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன்; தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்றுதானே கெடும்.
விளக்கம்:
['எண்பதத்தான்' என்னும் முற்று வினை எச்சமும், 'ஓரா' என்னும் வினை எச்சமும், 'செய்யா' என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன. தாழ்ந்த பதம் : பாவமும் பழியும் எய்தி நிற்கும் நிலை. 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' (நான்மணிக் 85) ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) எளிய காலத்தோடே நூலாராய்ந்து முறைமை செய்யாத அர சன், தனது தண்பதத்தினானே கெடுப்பாரின்றித் தானே கெடும,
(என்றவாறு). எண்பதமாவது வந்தவர் தங்கள் குறையைச் சொல்லுதற்கு எய்துங்காலம்; தண்பதமாவது குறையைச் சொல்லுதற்குத் தாழ்க்குங் காலம்.