குறள் 547

செங்கோன்மை

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்

iraikaakkum vaiyakam yellaam avanai
muraikaakkum muttaach seyin


Shuddhananda Bharati

Just government

The king protects the entire earth
And justice protects his royal worth.


GU Pope

The Right Sceptre

The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.

The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.


Mu. Varadarajan

உலகத்தை எல்லாம்‌ அரசன்‌ காப்பாற்றுவான்‌; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின்‌ அரசனை அந்த முறையே காப்பாற்றும்‌.


Parimelalagar

வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின்.
விளக்கம்:
[முட்டாமல் செலுத்தியவாறு; மகனை முறை செய்தான் கண்ணும் (சிலப். 20;53 - 55), தன்கை குறைத்தான் கண்ணும் (சிலப். 23: 42 - 53) காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) வையகமெல்லாவற்றையும் அரசன் காக்கும், அவ்வரசனை அவன் றான் செய்யும் முறை காக்கும்; அதனைத் தப்பாமற் செய்யின்,
(என்றவாறு). இது தனக்குக் காவலாம் என்றது.