குறள் 546

செங்கோன்மை

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்

vaelanru vaenri tharuvathu mannavan
koalathooung koataa thaenin


Shuddhananda Bharati

Just government

Not the spear but the sceptre straight
That brings success to monarch's might.


GU Pope

The Right Sceptre

Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.

It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.


Mu. Varadarajan

ஒருவனுக்கு வெற்றி பெற்றுத்‌ தருவது வேல்‌ அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்‌; அச்செங்கோலும்‌ கோணாதிருக்குமாயின்‌.


Parimelalagar

மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின் கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின்,
விளக்கம்:
[கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார்; ''மாண்ட. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்'' (புறநா 55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க.]


Manakkudavar

(இதன் பொருள்) அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின்,
(என்றவாறு). இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.