குறள் 544

செங்கோன்மை

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு

kutithaleeik koalochsum maanila mannan
atithaleei nitrkum ulaku


Shuddhananda Bharati

Just government

The world clings to the ruler's feet
Whose sceptre clasps the people's heart.


GU Pope

The Right Sceptre

Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.

The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.


Mu. Varadarajan

குடிகளை அன்போடு அணைத்துக்‌ கொண்டு செங்கோல்‌ செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்‌ பொருந்தி உலகம்‌ நிலைபெறும்‌.


Parimelalagar

குடிதழீஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடி- தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு - பொருந்தி, விடார் உலகத்தார்.
விளக்கம்:
[அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம் முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர் ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.]


Manakkudavar

(இதன் பொருள்) குடியைப் பொருந்தி முறைமை செலுத்துகின்ற பெரிய நில மன்னன் அடியைப் பொருந்தி நிற்கும் உலகு,
(என்றவாறு). இது முறைமை செய்யும் அரசன்கண்ண தாம் உலகு என்றது.