குறள் 543

செங்கோன்மை

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

andhthanar nootrkum araththitrkum aathiyaai
ninrathu mannavan koal


Shuddhananda Bharati

Just government

The Sage's scripture and virtue spring
From the sceptre of a stately king.


GU Pope

The Right Sceptre

Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.

The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues thereindescribed.


Mu. Varadarajan

அந்தணர்‌ போற்றும்‌ மறைநூலுக்கும்‌ அறத்திற்கும்‌ அடிப்படையாய்‌ நின்று உலகத்தைக்‌ காப்பது அரசனுடைய செங்கோலாகும்‌.


Parimelalagar

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது - அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற செங்கோல்.
விளக்கம்:
[அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும், தலைமை பற்றி 'அந்தணர் நூல்' என்றார். ''மாதவர் நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்'' (மணி. 22: 208, 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு 'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் - அநாதியாயினும், செங்கோல் இல்வழி நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் 'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை,
(என்றவாறு).