குறள் 540

பொச்சாவாமை

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்

ulliyathu yeithal yelithuman matrrundhthaan
ulliyathu ullap paerin


Shuddhananda Bharati

Unforgetfulness

Easy it is a thing to get
When the mind on it is set.


GU Pope

Unforgetfulness

'Tis easy what thou hast in mind to gain,
If what thou hast in mind thy mind retain.

It is easy for (one) to obtain whatever he may think of, if he can again think of it.


Mu. Varadarajan

ஒருவன்‌ எண்ணியதை விடாமல்‌ எண்ணி, (சோர்வில்லாமல்‌) இருக்கப்‌ பெற்றால்‌, அவன்‌ கருதியதை அடைதல்‌ எளிதாகும்‌.


Parimelalagar

தான் உள்ளியது எய்தல் எளிது மன் - அரசனுக்குத்தான் எய்த நினைத்த பொருளை அந்நினைத்த பெற்றியே எய்துதல் எளிதாம்; மற்றும் உள்ளியது உள்ளப் பெறின் - பின்னும் அதனையே நினைக்கக் கூடுமாயின்.
விளக்கம்:
[அது கூடாதென்பது ஒழிந்து நின்றமையின், 'மன்' ஒழி இசைக்கண் வந்தது. அதனையே நினைத்தலாவது; மறவி இன்றி அதன் கண்ணே முயறல். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமைக்கு உபாயம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தான் நினைந்த பொருளைப் பெறுதல் எளிது; பின்பும், அதனை மறவாதே நினைக்கக் கூடுமாயின்,
(என்றவாறு). இனிப் பொருளின் கண் மறவாமை கூறுவார் முற்பட நினைத்ததனை மற வாமை வேண்டுமென்றார்.