குறள் 538

பொச்சாவாமை

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

pukalndhthavai potrrich seyalvaendum seiyaathu
ikalndhthaarkku yelumaiyum il


Shuddhananda Bharati

Unforgetfulness

Do what the wise commend as worth
If not, for seven births no mirth.


GU Pope

Unforgetfulness

Let things that merit praise thy watchful soul employ;
Who these despise attain through sevenfold births no joy.

Let (a man) observe and do these things which have been praised (by the wise); if he neglects andfails to perform them, for him there will be no (happiness) throughout the seven births.


Mu. Varadarajan

சான்றோர்‌ புகழ்ந்து சொல்லிய செயல்களைப்‌ போற்றிச்‌ செய்ய வேண்டும்‌; அவ்வாறு செய்யாமல்‌ மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும்‌ நன்மை இல்லை.


Parimelalagar

புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் - நீதி நூலுடையார் இவை அரசர்க்கு உரியன என்று உயர்த்துக் கூறிய செயல்களைக் கடைப்பிடித்துச் செய்க; செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்-அங்ஙனம் செய்யாது மறந்தவர்க்கு எழுமையினும் நன்மை இல்லை ஆகலான்.
விளக்கம்:
[அச்செயல்களாவன: மூவகை ஆற்றலும், நால்வகை உபாயமும், ஐவகைத் தொழிலும், அறுவகைக் குணமும் முதலாய செயல்கள், சாதி தருமமாகிய இவற்றின் வழீஇயோர்க்கும் உள்ளது நிரயத் துன்பமே ஆகலின், 'எழுமையும் இல்' என்றார். 'எழுமை' ஆகு பெயர். இதனான் பொச்சாவாது செய்ய வேண்டுவன கூறப்பட்டன.]


Manakkudavar

(இதன் பொருள்) உயாந்தாரால் புகழப்பட்டவையிற்றைக் கடைப்பிடித்துச் செய் தல் வேண்டும்; இவையிற்றைச் செய்யாது இகழ்ந்தவர்க்கு எழுபிறப்பிலும் நன்மையில்லையாமாதலான்,
(என்றவாறு). இஃது அறத்தின்கண் இகழாமற் செய்வது கூறிற்று.