குறள் 537

பொச்சாவாமை

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்

ariyayenru aakaatha illaipoch saavaak
karuviyaal potrrich seyin


Shuddhananda Bharati

Unforgetfulness

With cautious care pursue a thing
Impossible there is nothing.


GU Pope

Unforgetfulness

Though things are arduous deemed, there's nought may not be won,
When work with mind's unslumbering energy and thought is done.

There is nothing too difficult to be accomplished, if a man set about it carefully, with unflinchingendeavour.


Mu. Varadarajan

மறவாமை என்னும்‌ கருவிகொண்டு (கடமைகளைப்‌) போற்றிச்‌ செய்தால்‌, செய்வதற்கு அரியவை என்று ஒருவனால்‌ முடியாத செயல்கள்‌ இல்லை.


Parimelalagar

அரிய என்று ஆகாத இல்லை - இவை செய்தற்கரியன என்று சொல்லப்பட்டு ஒருவற்கு முடியாத காரியங்கள் இல்லை; பொச்சாவாக் கருவியான் போற்றிச் செயின் - மறவாத மனத்தானே எண்ணிச் செய்யப் பெறின்.
விளக்கம்:
['பொச்சாவாத' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. அந்தக் கரணமாகலின் 'கருவி' என்றார். இடைவிடாத நினைவும் தப்பாத சூழ்ச்சியும் உடையார்க்கு எல்லாம் எளிதில் முடியும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் பொச்சாவாமையது சிறப்புக் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) செயற்கு அரியனவென்று செய்யலாகாதன வில்லை ; மறவாமை யாகிய கருவியாலே பாதுகாத்துச் செய்வானாயின்,
(என்றவாறு) இது வினை செய்யுங்கால் மறவாமை வேண்டுமென்றது.