குறள் 536

பொச்சாவாமை

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்

ilukkaamai yaarmaatdum yenrum valukkaamai
vaayin athuvoppathu il


Shuddhananda Bharati

Unforgetfulness

Forget none; watch with wakeful care
Miss none; the gain is sans compare.


GU Pope

Unforgetfulness

Towards all unswerving, ever watchfulness of soul retain,
Where this is found there is no greater gain.

There is nothing comparable with the possession of unfailing thoughtfulness at all times; andtowards all persons.


Mu. Varadarajan

யாரிடத்திலும்‌ எக்காலத்திலும்‌ மறந்தும்‌ சோர்ந்திருக்காத தன்மை தவறாமல்‌ பொருந்தியிருக்குமானால்‌, அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும்‌ இல்லை.


Parimelalagar

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் - அரசர்க்கு மறவாமைக் குணம் யாவர் மாட்டும் எக்காலத்தும் ஒழிவின்றி வாய்க்குமாயின்; அஃது ஒப்பது இல் - அதனை ஒக்கும் நன்மை பிறிது இல்லை.
விளக்கம்:
[வினை செய்வார் சுற்றத்தார் என்னும் தம்பாலார் கண்ணும் ஒப்ப வேண்டுதலின், 'யார் மாட்டும்' என்றும், தாம் பெருகியஞான்றும் சுருங்கிய ஞான்றும் ஒப்ப வேண்டுதலின் 'என்றும்' என்றும், எல்லாக் காரியங்களினும் ஒப்ப வேண்டுதலின் 'வழுக்காமை' என்றும் கூறினார். வாயின் என்பது முதனிலைத் தொழிற் பெயராக வந்த வினை எச்சம். வாய்த்தல்:நேர்படுதல்.]


Manakkudavar

(இதன் பொருள்) யாவர்மாட்டும் எல்லா நாளும் தப்புச் செய்யாமை தப்பாமல் வாய்க்குமாயின், அதனை யொக்க நன்மை பயப்பது பிறிதொன்று இல்லை, (எ-று). இது முறைமை செய்யுங்கால் கடைப்பிடித்துச் செய்யவேண்டு மென்றது.