குறள் 535

பொச்சாவாமை

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்

munnurak kaavaathu ilukkiyaan thanpilai
pinnooru irangki vidum


Shuddhananda Bharati

Unforgetfulness

Failing foresight the guardless man
Shall rue his folly later on.


GU Pope

Unforgetfulness

To him who nought foresees, recks not of anything,
The after woe shall sure repentance bring.

The thoughtless man, who provides not against the calamities that may happen, will afterwardsrepent for his fault.


Mu. Varadarajan

வரும்‌ இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல்‌ மறந்து சோர்ந்தவன்‌, பின்பு அவை வந்துற்றபோது தன்‌ பிழையை நினைந்து இரங்குவான்‌.


Parimelalagar

முன்னுறக் காவாது இழுக்கியான் - தன்னால் காக்கப்படும் துன்பங்களை அவை வருவதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான்; பின் ஊறு தன்பிழை இரங்கிவிடும் - பின் வந்துற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின் அப்பிழைப்பினை நினைத்து இரங்கிவிடும்.
விளக்கம்:
[காக்கப்படும் துன்பங்களாவன; சோர்வு பார்த்துப் பகைவர் செய்வன. 'ஊற்றின்கண்' என்புழி உருவும் சாரியையும் உடன் தொக்கன. உற்ற காலத்துக் காக்கல் ஆகாமையின், 'இரங்கிவிடும்' என்றார். இவை மூன்று பாட்டானும் பொச்சாப்பு உடையார்க்கு வரும் ஏதம் கூறப்பட்டது.]


Manakkudavar

(இதன் பொருள்) தன்னாற் காக்கப்படுந் துன்பங்களை அவை வருதற்கு முன்னே அறிந்து காவாது மறந்திருந்தான், பின் வந்துற்ற காலத்துக் காக்கலாகாமையின், அப் பிழைப்பினை நினைந்திரங்கிவிடும்,
(என்றவாறு).