குறள் 534

பொச்சாவாமை

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு

achcha mutaiyaarkku aranillai aangkillai
pochsaap putaiyaarkku nanku


Shuddhananda Bharati

Unforgetfulness

The fearful find no fortress here
The forgetful find good never.


GU Pope

Unforgetfulness

'To cowards is no fort's defence’; e'en so
The self-oblivious men no blessing know.

Just as the coward has no defence (by whatever fortifications ha may be surrounded), so thethoughtless has no good (whatever advantages he may possess).


Mu. Varadarajan

உள்ளத்தில்‌ அச்சம்‌ உடையவர்க்குப்‌ புறத்திலே அரண்‌ இருந்தும்‌ பயன்‌ இல்லை; அதுபோல்‌ மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும்‌ பயன்‌ இல்லை.


Parimelalagar

அரண் அச்சம் உடையார்க்கு இல்லை - காடு மலை முதலிய அரண்களுள்ளே நிற்பினும், மனத்தின்கண் அச்சமுடையார்க்கு அவற்றால் பயன் இல்லை; ஆங்கு நன்கு பொச்சாப்பு உடையார்க்கு இல்லை - அதுபோலச் செல்வமெல்லாம் உடையராயினும், மனத்தின்கண் மறவியை உடையார்க்கு அவற்றால் பயன் இல்லை.
விளக்கம்:
[நன்மைக்கு ஏதுவாகலின் 'நன்கு' என்றார். அச்சமுடையார் நின்ற அரண் அழியுமாறு போல, மறவி உடையாருடைய செல்வங்களும் அழியும் என்பதாயிற்று.]


Manakkudavar

(இதன் பொருள்) அச்சமுடையார்க்கு ஆவதொரு அரணில்லை; அதுபோல், பொச்சாப்புடையார்க்கு வருவதொரு நன்மை இல்லை ,
(என்றவாறு). இது பொச்சாப்புடையார்க்குக் காவலில்லை என்றது.