Kural 533
குறள் 533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு
pochsaappaark killai pukalmai athuulakaththu
yeppaalnoo lorkkum thunivu
Shuddhananda Bharati
Forgetful nature fails of fame
All schools of thinkers say the same.
GU Pope
'To self-oblivious men no praise’; this rule
Decisive wisdom sums of every school.
Thoughtlessness will never acquire fame; and this tenet is upheld by all treatises in the world.
Mu. Varadarajan
மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.
Parimelalagar
பொச்சாப்பார்க்கும் புகழ்மை இல்லை-பொச்சாந்து ஒழுகுவார்க்குப் புகழுடைமை இல்லை; அது உலகத்து எப்பால் நூலோர்க்கும் துணிவு-அவ்வின்மை இந்நீதி நூலுடை யார்க்கேயன்றி உலகத்து எவ்வகைபட்ட நூல் உடையார்க்கும் ஒப்ப முடிந்தது.
விளக்கம்:
[அரசர்க்கேயன்றி அறம் முதலியன நான்கினும் முயல்வார் யாவர்க்கும் அவை கைகூடாமையின் புகழில்லை என்பது தோன்ற, 'எப்பால் நூலோர்க்கும் துணிவு' என்றார்.]
Manakkudavar
(இதன் பொருள்) பொச்சாப்பு உடையார்க்குப் புகழுடைமையில்லையாம்; அஃது உலகத்து வழங்குகின்ற எவ்வகைப்பட்ட நூலோர்க்குந் துணிவு,
(என்றவாறு) இது பொச்சாப்பார்க்குப் புகழாகாதென்றது.